மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.4.2024 ஆகும். வாக்கு எண்ணிக்கை நாள் - 4.6.2024 ஆகும். வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் - 27.03.2024, வேட்பு மனுபரிசீலனை நாள் - 28.03.2024, வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 30.03.2024 ஆகும். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு சீர்காழி,தென்பாதி, குட் சமரிடன் பள்ளியில் 1294 அலுவலர்களுக்கும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் 1764 அலுவலர்களுக்கும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1155 அலுவலர்களுக்கும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1438 அலுவலர்களுக்கும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் 1647 அலுவலர்களுக்கும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1137 அலுவலர்களுக்கும் நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குசாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்ஃதேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப.,அவர்கள் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு,பயிற்சி பெற்ற வாக்குசாவடி அலுவலர்களிடம் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக வினா எழுப்பினார். தொடாந்;து பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவிற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கும்கோணம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவிற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவிற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு நடைமுறைளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்ஃதேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் .தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முத்துகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், திருவிடைமருந்தூர் வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story