புதிய கிராமம் செயலக கட்டிடம் ஆய்வு

புதிய கிராமம் செயலக கட்டிடம் ஆய்வு

புதிய கிராமம் செயலகம் கட்டடம் ஆய்வு

சிந்தலவாடி ஊராட்சியில் புதிய கிராமம் செயலகம் கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டார்

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டபட்டுள்ள பல்வேறு கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிந்தலவாடி ஊராட்சி கிராமம் செயலகம் கட்டடம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

ரூ.42.62 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி கிராம செயலக கட்டடத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆகியோருக்கு தனித்தனியா அறைகளும் பதிவரை, வேளாண் மற்றும் சமூக நலன் துறை சார்ந்த அலுவலர்கள் அறை, கூட்டரங்கம், காத்திருப்பு அறை, பொது கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் ,மற்றும் அவர்களுக்கான கழிப்பறை போன்ற வசதிகள் கொண்டது இந்த ஊராட்சி கிராமம் செயலக கட்டடம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கட்டிடத்தை பார்வையிட்ட பிறகு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி ,ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுமித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கிருஸ்டி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் , சிந்தலவாடி ஊராட்சிமன்ற தலைவர் வெண்ணிலா , ஊராட்சி செயலர் ராஜரத்தினம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story