ஊத்தங்கரையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தனியார் வாகனங்கள் ஆய்வு
ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள165 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 165 தனியார் பள்ளி வாகனங்கள் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தன் அன்பு செழியன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு ஊத்தங்கரை தாசில்தார் திருமால் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
பள்ளி வாகனங்களில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய தீயணைப்பு கருவி வேக கட்டுப்பாட்டு கருவி முதல் உதவி பெட்டி அவசர வழி மற்றும் வாகன பராமரிப்பு போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. ஊத்தங்கரை போச்சம்பள்ளி சார்ந்த 36 பள்ளிகளின் 165 வாகனங்கள் ஆய்வுக் உட்படுத்தப்பட்டது. மேலும் ஓட்டுனர்களுக்கு தீயணைப்புத் துறையின் மூலமாகவும் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் விபத்து காலங்களில் ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள் குறித்த செயல்முறை விளக்க விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது