பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு
பள்ளி வாகனம் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவறுத்தலின்படியும், சென்னை போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கையின்படியும் மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறையின்படியும் பள்ளி வாகனங்கள் செயல்படுகின்றனவா என ஒவ்வொரு ஆண்டும், ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், நாளை, (மே.11 சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளார் என, தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
Next Story