பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு - ஆட்சியர் மெர்சி ரம்யா

பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு - ஆட்சியர்  மெர்சி ரம்யா

ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்கள் நாளை ஆய்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

புதுகை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்திடும் வகையில் புதுகை ஆயுதப்படை மைதானத்தில் 10ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கலெக்டர், மாவட்ட எஸ்பி முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஆர்டிஓ, வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் பள்ளி வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதி சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்படும். ஆய்வுக்கு வரும்போது ஓட்டுநர் பெயர் வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் வரவேண்டும். தீயணைப்பான் கருவி புதுப்பிக்க ப்பட்டு நடப்பில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் மருந்துகள் இருப்பில் இருக்குமாறு கொண்டு வரவேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் உபகரணம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story