விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


கள்ளக்குறிச்சி விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதி விதைப்பண்ணை வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் விதை பண்ணைகள் அமைத்து விதை கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்-40 ஹெக்டர், கம்பு-10 ஹெக்டர், உளுந்து-95 ஹெக்டர், மணிலா-11 ஹெக்டர், எள்-5 ஹெக்டர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விதை பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விதை பண்ணை வயல்களை வேளாண் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, சிறுவங்கூர் கிராமத்தில் விவசாயிகள் தண்டபாணியின் கம்பு பயிர், ரமேஷின் உளுந்து வயல், தென்கீரனுார் கணேஷ்குமாரின் எள் வயல், சக்திவேலின் நெல் வயல் ஆகிய விதைப்பண்ணை வயல்களை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story