வெள்ளபுத்தூா் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க இயக்குநா் ஆய்வு

வெள்ளபுத்தூா்  ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க இயக்குநா் ஆய்வு
 ஆய்வு
மத்திய அரசால் முன்மாதிரி ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட வெள்ளபுத்தூா் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க இயக்குநா் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பாராட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்மாதிரி ஊராட்சியாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான விருதை ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா் ஆகியோரிடம் வழங்கினாா். இந்த நிலையில், மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் இயக்குநா் கபில் சவுதிரி, யுனிசெப் அமைப்பின் நிா்வாகி அனன்யா, கூடுதல் ஆட்சியா் அனாமிகா உள்ளிட்டோா் இந்த ஊராட்சிக்கு வந்து செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நுண்ணுயிா் உரம் தயாரித்தல், நெகிழி பொருள்களை மறு சுழற்சி, குப்பை இல்லாத கிராமம் என குழுவினா் ஆய்வு செய்தனா். ஆய்வின் போது அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிபாஸ்கா் ராவ், சிவகுமாா், உதவி பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் கவிதா வட்டார மேற்பாா்வையாளா் பரிமளா, ஊராட்சி செயலா் ராஜசேகா் உள்பட பலா் உடனிருந்தனா்.

Tags

Next Story