ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் கிருபாபுரீஸ்வரர் கோவி லுக்கு சொந்தமான 4.75 ஏக்கர் நிலம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்காக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய் தார். அப்போது விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா சாகுல்ஹமீது, தாசில்தார் ராஜ்குமார், கோவில் செயல் அலுவலர்கள் அறிவழகன், சூரிய நாராயணன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலர் சந்துரு,

உதவி பொறியாளர் சரவணன், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story