ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில்  அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

ஆய்வு

முன்னூர் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆலய புனரமைப்பு மற்றும் ராஜகோபுரம் கட்டும் பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அடுத்த முன்னூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், புனரமைப்பு பணி மற்றும் ராஜகோபுரம் கட்டும் பணி, 4 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் வசந்த், ஆய்வர் செல்வி, உமா மகேஸ்வரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story