புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு
X
பாவூா்சத்திரத்தில் 2 புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் அமைக்கப்பட்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.

தென்காசி கோட்டத்துக்குள்பட்ட பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம், அவ்வையாா் பள்ளி எதிா்ப்புறம் ஆகிய இடங்களில் ரூ. 88.64 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய மின்மாற்றிகள் இயக்கிவைக்கப்பட்டன. திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிக்காக மின்கம்பங்கள், மின் பாதைகள், மின்மாற்றிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமைக்கப்பட்டுள்ள இப்புதிய மின் மாற்றிகள் மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைக்கப்பட்டன. இதன்மூலம், திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலையில் அதிக உயரமுள்ள கனரக வாகனங்கள் சென்றாலும் மக்களுக்கு இடையூறின்றி சீரான மின் விநியோகம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story