திருப்போரூர்-நெம்மேலி சாலையில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை

திருப்போரூர்-நெம்மேலி சாலையில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை
 மின் விளக்கு அமைக்கும் பணி
பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து திருப்போரூர்-நெம்மேலி சாலையில் ரூ. 3. 20 லட்சம் மதிப்பில், 22 மின்விளக்கு மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ. எம். ஆர். , - - இ. சி. ஆர். , சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - -- நெம்மேலி சாலை உள்ளது. இச்சாலை இடையே, 3 கி. மீ. , துார சாலையும், பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள தாசில்தார் அலுவலகம், பி. டி. ஓ. , அலுவலகம், சார் --- பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் மற்றும் கந்தசுவாமி கோவில் ஆகியவை உள்ளன. மேற்கண்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கோவிலுக்கு, இ. சி. ஆர். , சாலையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோல், இ. சி. ஆர். , சாலையில் உள்ள நெம்மேலி அரசு கல்லுாரி, திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், வடநெம்மேலி முதலை பண்ணை, கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம் போன்ற பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மின்விளக்கு வசதியில்லாமல், இச்சாலையில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழலும், குற்ற சம்பவங்கள் அரங்கேறும் சூழலும் உள்ளது. எனவே, மின் விளக்கு அமைக்கக்கோரி, மக்கள் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நெம்மேலி ஊராட்சி எல்லை அடங்கிய பகுதி வரை, ஊராட்சி நிதியில் 3. 20 லட்சம் மதிப்பில், 22 மின்விளக்கு மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags

Next Story