வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி !
ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ்
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் 147 வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1489 வாக்குச்சாவடிகளில் 967 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளது.
262 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 116 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் 148 நுண்பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி, வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு சாய்வு தளம் மற்றும் 888 சக்கர நாற்கலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.