உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்
நினைவு பரிசு வழங்கல்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நாள் விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவர் அபய் ஜெரே பேசியது: உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்படுத்த வேண்டும்.
பணியிடத் தேவைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால், நிலையான பதவிக் காலத்துக்கு அவர்களை உருவாக்கக்கூடாது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் நிச்சயமற்ற தன்மையால் மட்டுமல்ல, சுய மற்றும் நிலையான வாழ்வாதாரத்துக்கு பட்டதாரிகள் தொடர்ச்சியான கற்றல் இருப்பது மிகவும் அவசியம்.
அனைத்து வகையான கற்றல் - கற்பித்தல்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றார் அபய் ஜெரே. பின்னர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கு விருதுகளையும், ஆசிரியர் மற்றும் முனைவர் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி விருதுகளையும் அபய் ஜெரே வழங்கினார்.
முன்னதாக, பல்கலைக்கழ கத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் பேசுகையில், 1,100-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 12 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன; 8 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1,900 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டங்களில் ரூ.100 கோடிக்கு புதிய முதலீடும், ரூ. 125 கோடிக்கு உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில்பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன், பதிவாளர் ஆர்.சந்திரமௌலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.