குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத் திறனாளிகள் துறை செயலருமான எஸ்.நாகராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்த் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத் திறனாளிகள் துறை செயலருமான எஸ்.நாகராஜன், அதை தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனை அறிவுறுத்தினார். ரூ. 75 கோடியில் புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர்த் திட்ட சீரமைப்புப் பணிகளை திருவப்பூரில் அவர் பார்வையிட்டார். மேலும், அன்னவாசல் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ 1.03 கோடியில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணி, தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள இரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றையும் நாகராஜன் பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி) சி.ந. சியாமளா உள்ளிட்டோர்.
Next Story