அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

அட்மா பயிற்சி

விராலிமலை அட்மா திட்டத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

விராலிமலை வட்டாரத்தில் வேளாண் துறையில் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2023 -2024 நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி குழு தலைவர் இளங்குமரன் தலைமை வகித்தார். அட்மா திட்டம் ஆலோசனை குழு உறுப்பினர் ஐயப்பன் புதுக்கோட்டை மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலையம் துணை இயக்குனர் மறியரவி, ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

இதில் பேசிய துணை இயக்குனர் மரிய ரவி ஜெயக்குமார் நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற கோடை உழவு செய்து பருவத்துக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்து சரியான பருவத்தில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து விதைக்க வேண்டும் மேலும் உயிர் உரங்களான திரவ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் பொட்டாசியம் கொண்டு விதை நேர்த்தி செய்து சரியான இடங்களில் பயிர் விதைத்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story