ஒருங்கிணைந்த பண்ணையம்- விவசாயிகள் பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணையம்-  விவசாயிகள் பயிற்சி

பயிற்சி முகாம் 

திருவண்ணாமலை :- வந்தவாசி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பிருதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது இப்பயிற்சி வந்தவாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்லதுரை தலைமையில் நடைபெற்றது இப்பயிற்சியில் வந்தவாசி வட்டார வேளாண்மை அலுவலர் விஜய்குமார், விவசாயிகளை வரவேற்று மானியத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். கீழநெல்லி வேளாண் அறிவியல் நிலையத்தை சேர்ந்த சௌத்ரி மண்புழு உரம் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு பற்றி போன்ற ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில் நுட்பங்கள் எடுத்துரைத்தார் வேளாண்மை உதவி இயக்குனர் செல்லதுரை பயிர்களை தாக்கும் பூச்சி நோய்கள் அவற்றினை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார் மேலும் உழவன்செயலி பற்றியும் ,தமிழ் மண்வளம் பற்றி எடுத்துரைத்தார் .இந்நிகழ்ச்சியில் நிறைவாக துணை வேளாண்மை அலுவலர் சரவணன் நன்றி தெரிவித்தார். இப்பயிற்சியை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் சிந்தாமணி, சல்மான் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story