ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலம் : எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தல்.

ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலம் :  எம்எல்ஏ  தாரகை கத்பட் வலியுறுத்தல்.

 தாரகை கத்பட் எம்எல்ஏ

விளவங்கோடு தொகுதியில் ஒருங்கிணைந்த சுற்றுலாத்தலம் அமைக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ தாரகை கத்பட் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் சுற்றுலாத்தலம் வேண்டும் என்று தாரகை கத்பர்ட் எம் எல் ஏ கோரிக்கை விடுத்துள்ளார், சட்டமன்றத்தில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது இன்று பேசியதாவது: விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட சிற்றாறு, நெட்டா, கணபதிக்கல் போன்ற இடங்களை சேர்த்து ஒரு எக்கோ டூரிசம் வேண்டும் அதாவது ஒருங்கிணைந்த சுற்றுலா தலம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டு கொண்டதற்கு, இதன் அடிப்படையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் பதிலளிப்பதாக கூறினார்.

மேலும் தடம் எண் 86 பி டவுன் பஸ் மார்த்தாண்டத்திலிருந்து குழித்துறை, கழுவந்திட்டை ஞாறாம்விளை, மேல்புறம் முக்கூட்டக்கல் வழியாக சென்று கொண்டிருந்தது, இப்பொழுது குழித்துறை, மேற்புறம் வழியாக செல்கிறது. உள்ளே உள்ள கிராம மக்கள், பொதுமக்கள், பள்ளிக்குப் செல்லும் பிள்ளைகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல் மார்த்தாண்டம் - பனச்சமூடு போகின்ற தடம் எண் 86-இ பஸ் முன்பு போல எல்லா ரூட்டுகளிலும் சென்று வருமாறு பேசினேன்.அதேபோல ஆறுகாணியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ்ஸை விடுவதற்காக கேட்டுக்கொண்டேன். அமைச்சர் உரிய ஆவணம் செய்வதாக உறுதியளித்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story