வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

 தடுப்புகள் அமைக்கும் பணி 

காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
காரைக்குடியில், சிவகங்கை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான அழகப்பச்செட்டியாா் அரசு பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப். 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டபேரவைத்தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டப்பேரவைத்தொகுதிகளும் என 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், சிவகங்கை தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையங்களாக காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரி ஆகியவை செயல்பட உள்ளன. வாக்குப் பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணியும், மின் விளக்குகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, வாக்குப் பெட்டிகளை வைக்கும் அறைகளில் தரையில் கட்டமிடப்பட்டு எண்களைக் குறிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், வாக்குகள் எண்ணும் இடங்களில் இரும்புக் கம்பிகளால் வலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Tags

Next Story