உத்திரமேரூரில் செங்கல் உற்பத்தி பணி தீவிரம்

உத்திரமேரூரில் செங்கல் உற்பத்தி பணி தீவிரம்

செங்கல் தயாரிப்பு பணிகள் 

பருவமழை காலத்தை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் செங்கல் உற்பத்தி செய்யும் பணி சூடு பிடித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி, காவியத்தண்டலம், காவூர், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், தனி நபர்கள் தங்களது நிலங்களில் மண் எடுத்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆண்டு முழுதும் செங்கல் உற்பத்தி செய்தாலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு முன்னதாகவே செங்கல் உற்பத்திக்கான பணிகளை துவக்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, களியப்பேட்டை பகுதி செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கோடைக்காலத்தில் கட்டுமான பணிகள் அதிக அளவில் நடக்கும் என்பதால், அப்போது செங்கல் தேவை அதிகமாக இருக்கும். மேலும், தமிழக அரசின் வீடு வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கும் இப்பகுதிகளில் செங்கல் கேட்டு வருகின்றனர். இதனால், செங்கல் தயாரிப்பு பணியை தற்போது முன்கூட்டியே துவக்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்."

Tags

Next Story