கொட்டாரம் மேம்பாலத்தில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரம்

பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது. இந்த நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கும் வகையில் தற்போது இருபுறமும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது.
