பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணி தீவிரம்

பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணி தீவிரம்
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோபுராஜபுரம் ராஜகிரி பண்டாரவாடை ரெகுநாதபுரம் சரபோஜி ராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கோடை பயராக பருத்தி அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது கோடையில் நெல் உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி பயிர் செய்ய கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கோடையில் அதிகளவு மழை பெய்ததால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் மற்றும் விலை கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது இது குறித்து பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில் பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல மகசூல் விலை கிடைத்து வந்தது அதனால் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்திருந்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு அதிக அளவில் கோடை மழை பெய்ததால் பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை விலையும் இல்லை இருந்தபோதிலும் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு நல்ல மகசூல் விலை கிடைக்கும் என்று நம்பிக்கையில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளதாக தெரிவித்தனர்

Tags

Next Story