டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
பொன்னமராவதி பேரூராட்சி பொன்.புதுப்பட்டி பாண்டி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்தல், பழைய டயர், பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுத்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கையில் களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். சுகாதார ஆய்வாளர் (பொ) உத் தமன் மற்றும் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story