மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
வரவேற்பு தெரிவித்த பொதுமக்கள்
திண்டுக்கல் மாநகராட்சி நாய்கள் பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் அதிகமாக தொல்லை செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு ரவிச்சந்திரனுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, முகமது அனிபா, செல்வராணி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் நாய் பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.பேகம்பூர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் நாய்கள் பிடிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Next Story