வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்

வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.  

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

தூத்துக்குடி மாநகரில் பெய்த மழை வெள்ளம் காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் வாகன காப்பகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள் நான்கு சக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கி சேதம் மீட்கும் பணியில் உரிமையாளர்கள் தீவிரம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி பெய்த கன மழை காரணமாக மாநகரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஆங்காங்கே வாகன காப்பகங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் பள்ளி மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள் மழை நீரில் மூழ்கி சேதம் ஆகின இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் சற்று மழை நீர் குறைய துவங்கியதை தொடர்ந்து கார்களின் உரிமையாளர்கள் தங்கள் கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மழைநீரில் மூழ்கி கிடக்கும் கார்களை பத்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்டு வெளியே எழுத்து தண்ணீரை கார்களில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த கார்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் தாங்கள் இதை எவ்வாறு ஈடு செய்யப் போகிறோம் என கார் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

Tags

Next Story