சாலை ஓரம் மரக்கன்றுகளுக்கு தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

X
மரக்கன்றுகளுக்கு தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்
சாலை ஓரம் இருக்கும் மரக்கன்றுகளுக்கு, ஆள் உயர மூங்கில் வலை மற்றும் தடுப்பு கட்டை அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் பகுதி வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார்ச்சாலை போடாத இடத்தில், எம்-சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, சாலை விரிவுபடுத்தும் பணிக்கு கையகப்படுத்திய காலி நிலத்தில், 10,220 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். தற்காலிகமாக, பசுமை வலை போட்டு மூடி வைத்திருந்தனர். இது, பலமாக காற்று அடிக்கும் போது, வேருடன் மரக்கன்று சாய்ந்து விடுகிறது. இதை தவிர்க்க, மூங்கில் கூடைகளை அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட், திம்மசமுத்திரம், குதிரைக்கால் மடுவு, செம்பரம்பாக்கம் ஆகிய சாலை ஓரம் இருக்கும் மரக்கன்றுகளுக்கு, ஆள் உயர மூங்கில் வலை மற்றும் தடுப்பு கட்டை அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்."
Next Story
