குற்றாலம் அருவிகளில் ‘அலாரம்’ பொருத்தும் பணி தீவிரம்

குற்றாலம் அருவிகளில் ‘அலாரம்’ பொருத்தும் பணி தீவிரம்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.  

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். அப்போது, அருவிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுது வாடிக்கையாக இருந்து வந்தது. கடந்த 17ஆம் தேதி பழையகுற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலியைச் சோ்ந்த அஷ்வின்(17)தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை கண்காணித்து முன்னெச்செரிக்கையாக வெளியேற்ற அலாரம் பொருத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, குற்றாலம் பேரருவியில் சிறப்புநிலை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதிகளில் எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டுள்ளது;

ஐந்தருவியிலும் அலாரம் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது. மேலும், வனத்துறையினா் அருவியின் மேல்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அருவிப் பகுதிக்கு மேலே வெள்ளப்பெருக்கை கண்காணிக்க சென்சாா் கருவிகள் பொருத்தவும் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story