கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

வைகை ஆற்றில் சுத்தப்படுத்தும் பணிகள்

கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அந்தப் பகுதியை மதுரை மாநகராட்சி தற்போது செப்பனிட்டு, தூய்மை செய்து வருகிறது. ம

துரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருவிழாவினை முன்னிட்டு மதுரை மாநகரே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20-ஆம் தேதி திக் விஜயமும், 21-ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கிடையே வருகின்ற 21-ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்படுகிறார்.

ஏப்ரல் 22-ஆம் தேதி மூன்று மாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்ச்சி ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் நடைபெறும். இதில் மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மட்டுமன்றி தென்மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே வைகையாற்றில் எழுந்தருள்வார் என்பதால், அவ்விடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்து வருகிறது. கள்ளழகர் இறங்கக்கூடிய தண்ணீர்த் தொட்டியும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. செம்மண், சரளைக்கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலமாக அவ்விடம் சமதளமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது வைகையாற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தால், இதற்காக வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story