செங்கோட்டை ரயில் நிலையத்தில் லிப்ட் அமைக்கும் பணி தீவிரம்
லிப்ட் அமைக்கும் பணி தீவிரம்
செங்கோட்டை ரயில் நிலையத்தில் லிப்ட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நான்கு நடைமேடைகள் உள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நடைமேடை பகுதிகளை அமைந்துள்ள பாலத்தில் ஏரி செல்ல சிரமப்பட்டு வருவதை முன்னிட்டு 1&2 நடைமேடைகளில் இரண்டு மின்தூக்கிகள் (Lifts) அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று கதவுகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. விரைவில் மின்தூக்கிகள் இயங்க துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ரயில் பயணிகள் உள்ளிட்டா பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story