கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்
தூர்வாரும் பணி
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி நெமிலி பேரூராட்சி 15 வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி பேரூராட்சியில் உள்ள அண்ணா சாலை, அரக்கோணம் சாலை, பனப்பாக்கம் சாலை, பாணாவரம் சாலை, வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
அப்போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு கழிவுகளை கொட்டக்கூடாது என்றும், கால்வாய்களில் குப்பை கழிவுகள் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தெரிவித்துள்ளார்.