ரூ.65 லட்சத்தில் புது வடிகால் பணி தீவிரம்

ரூ.65 லட்சத்தில் புது வடிகால் பணி தீவிரம்

வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை, காரம்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் கடந்த 'மிக்ஜாம்' புயலின்போது பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், காரம்பாக்கம் 150வது வார்டில் பொன்னியம்மன் கோவில் தெருவிலும் மழைநீர் தேங்கியது. இந்த தெருவில் உள்ள மழைநீர் வடிகால் பல ஆண்டுகளுக்கு முன், போரூர் பேரூராட்சியாக இருந்த போது கட்டப்பட்டது. இந்த மழைநீர் வடிகால் சிதிலமடைந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து, 300 மீட்டர் துாரத்திற்கு அவ்வையார் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் செங்குட்டுவன் தெரு வழியாக, 65 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கிருந்து வெளியேறும் மழைநீர், வானகரம் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக கூவம் ஆற்றில் செல்கிறது. இந்த மழைநீர் வடிகால் பணியால் குறுகலான செங்குட்டுவன் தெரு சேறும், சகதியுமாகி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story