மார்த்தாண்டத்தில் சேதமடைந்த பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

மார்த்தாண்டத்தில் சேதமடைந்த பாலம் சீரமைக்கும் பணி தீவிரம்

பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம் 

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்த சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேற்பகுதியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் அடியில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும்படி.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக விரோதிகள் பாலத்தை உடைத்துள்ளதாக பாஜகவினரும், பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை அடுத்து பாலம் சேதமடைந்ததை குறித்து பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் சேதமடைந்த பகுதியை பொறுத்தமட்டில் அருகாமையில் உள்ள பகுதிகள் கீறலோ விரிசலோஏற்படவில்லை, ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் குழி விழுந்துள்ளது. அது எவ்வாறு சேதம் அடைந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதில் கட்டப்பட்டிருக்கின்ற கம்பிகள் மற்றும் கீழ் பகுதியில் உள்ள தூண்கள் உறுதி தன்மையுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதை அடுத்து பணியாளர்கள் இயந்திரங்கள் உதவியுடன் சேதமடைந்த பகுதியை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story