ஓரிக்கை பாலாற்று குடிநீர் கிணற்றில் மணல் அகற்றும் பணி தீவிரம்
பாலாற்று குடிநீர் கிணறு
ஓரிக்கை பாலாற்று குடிநீர் கிணற்றில் உள்ள மணலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, ஓரிக்கை மற்றும் திருப்பாற்கடல் ஆகிய இரு பகுதிகளில் உள்ள பாலாற்றிலிருந்து குடிநீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்க இருப்பதால், மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்படாமல் இருக்க, குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 9.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. ஓரிக்கை பாலாற்றில் உள்ள குடிநீர் கிணற்றில், மணல் அதிகம் சேர்ந்துள்ளதால், குடிநீர் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, ஓரிக்கை பாலாற்று குடிநீர் கிணற்றில்உள்ள மணலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. அதேபோல, பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன்தெருவில் உள்ள ராட்சதகுடிநீர் குழாயில் வால்வு மாற்றும் பணியும் நடக்கிறது. இப்பணிகளை, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, தி.மு.க.,- எம்.எல்.ஏ., எழிலரசன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், பொறியாளர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
Next Story