வேதாளை கடற்கரையில் கடத்தல் பொருட்கள் தேடும் பணி தீவிரம்

இலங்கையில் இருந்து மர்ம பொருள் ஒன்றை கடத்தி வந்து வேதாளை கடலில் போடப்பட்ட சம்பவத்தில் இரண்டு கடத்தல்காரர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேதாளை கடற்கரையில் மூன்றாவது நாளாக கடத்தி வந்த மர்ம பொருளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணமாக அண்மை காலமாக இலங்கையிலிருந்து கடத்தல் தங்கம் ,போதைப் பொருள்கள் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்திவரப்பட்டு தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் கடத்தல் காரர்கள் விட்டுச் சென்று மீண்டும் அந்த கடத்தல் பொருளை கடற் பகுதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அதனை எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு இலங்கையில் இருந்து கடத்தல் பொருள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தகவலின் அடிப்படையில் இரண்டு கடத்தல் காரர்களை வேதாளை கடற்கரை அருகே பிடித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது இரண்டு கடத்தல் காரர்கள் கடத்திவரப்பட்ட மர்ம பொருளை கடலில் போடப்பட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளன இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் இணைந்து வேதாளை கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக கடலில் போடப்பட்ட கடத்தல் பொருளை தேடும் பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நேற்று தேடுதல் வேட்டையில் தோய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் அதே இடத்தில் தற்போது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் வேதனை கடற்கரையில் ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் வீரர்களின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தேர்தலுக்குப் பின் கடத்திவரப்பட்ட பொருள் தங்கமா அல்லது வேறு ஏதேனும் போதை பொருளா என தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story