பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்களை அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்களை அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,பள்ளி திறக்கும் தினத்தன்றே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் இருந்து பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை அனுப்பும் பணி தொடங்கியது.
முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் புத்தகம், நோட்டு நேற்று அனுப்பபட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர்கள், தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விபரங்களை தெரிவித்து, புத்தகம், நோட்டுகளை வாங்கி சென்றனர்.