தேவார பதிக செப்பேடுகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

தேவார பதிக செப்பேடுகளை சுத்தம் செய்யும்  பணி தீவிரம்

 சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகளை ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகளை ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.இக் கோவிலில் கும்பாபிஷேக பணிக்காக கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, நந்தவனத்தில் பள்ளம் தோண்டிய போது, 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், மற்றும் 492 தேவார பதிகம் பதியப்பட்ட செப்பேடுகள், கண்டெடுக்கப்பட்டு, அவை கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வருவாய்த்துறை மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவினர் முதல் கட்டமாக 112 செப்பேடுகளை கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். இதே போல் அனைத்து செப்பேடுகளையும் சுத்தம் செய்து பின்னர் செப்பேடுகளின் தகவல் படி எடுத்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் பத்து நாட்கள் இந்த பணி நடைபெறும் எனவும் தெரிவித்தனர். செப்பேடுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை வருவதை அறிந்த தமிழ் சங்கத்தினர், அதிகாரியிடம் ஆய்வுகள் முடித்த பின்னர், செப்பேடுகளை கோவிலிலேயே வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story