தீவிர கொசு ஒழிப்புப் பணி - மாநகராட்சி ஆணையர் துவக்கி வைப்பு

அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் தீவிர கொசு ஒழிப்புப் பணியினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர்தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, செயின்ட் மேரிஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் தீவிர கொசு ஒழிப்புப் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின்போது மாமன்ற உறுப்பினர் மோ.சரஸ்வதி, மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story