தண்டவாளம் பராமரிப்பு பணிகள் தீவிரம்

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் தீவிரம்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.


திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு பெங்களூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கிறது. மேலும் அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 9 ரயில்வே தண்டவாள பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தண்டவாளங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பது வழக்கம். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களைக் கொண்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தண்டவாளத்தில் துருப்பிடித்தல் விரிசல் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்படும். இது தவிர வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் தினசரி இயக்கப்படுவதால் தண்டவாளத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனை பராமரிக்கும் வகையில் புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் தார் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story