ராணிப்பேட்டை முழுவதும் தீவிர கண்காணிப்பு!

ராணிப்பேட்டை முழுவதும் தீவிர கண்காணிப்பு!

பைல் படம்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் பறக்கும் படை குழு, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழு போன்ற கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை பணிகள் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் சோதனை நடத்தி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story