சேலம் அருகே கோவிலில் பட்டாசு வெடித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

சேலம் அருகே கோவிலில் பட்டாசு வெடித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

சேலம் அருகே கோவிலில் பட்டாசு வெடித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை 

சேலம் அருகே கோவிலில் பட்டாசு வெடித்த தொழிலாளிக்கு உடல் கருகி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் இரும்பாலை அருகே இருசாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த பட்டாசை சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கச்சுபள்ளி பகுதியை சேர்ந்த பட்டாசு வெடிக்கும் தொழிலாளியான சக்திவேல் (வயது 27) என்பவர் வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் விட்ட ராக்கெட் பட்டாசு தீப்பொறிகள் பறந்து தனது அருகே வைத்திருந்த மற்ற பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் அந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் சக்திவேலை சுற்றி இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறியதால் அவர் உடல் கருகினார். மேலும் அவர் வந்த மோட்டார்சைக்கிளும் எரிந்து நாசமானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story