இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு !

இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு !

வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏ. வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரான எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏ. வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற வேட்பாளரான எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .உடன் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஆர்வி என் கண்ணன் உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்விஎன் கண்ணன் பேசியதாவது: தமிழகம் போதைப் பொருளின் புகலிடமாக மாறிவிட்டது. போதைப் பொருள் கடத்துபவரோடு திமுகவினரும் கூட்டாக உள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த முறை வெற்றி பெற்று எம்பி ஆனவர்கள் என்ன பார்லிமெண்டில் பேசினார்கள்.ஏதாவது திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார்களா. காவிரியில் அணைக்கட்ட கர்நாடகா துடிக்கிறது. கூட்டணி கட்சியை கண்டிக்க திறணற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story