திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீராம் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட நான்கு வார்டு பகுதிகளில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் நகரச் செயலாளர் வேல்முருகன் ஏற்பாட்டில் நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story