திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் இடைத்தார்கள் போராட்டம் !

திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்புடைய எண்ணுடன் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இடைதரகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: காதர்பேட்டையில் பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பு எண்ணுடன் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இடைத்தரகர்கள் போராட்டம். திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள காதர் பேட்டை பனியன் விற்பனை செய்யும் சந்தையில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் வெளியூரில் இருந்து பனியன் ஆடைகள் வாங்க வருபவர்களை நேரடியாக கம்பெனிக்கு அழைத்துச் சென்று பனியன் ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேரடியாக உற்பத்தி நிறுவனங்களின் தொடர்பு எண் உடன் காதர்பேட்டை பகுதியில் விளம்பர பேனர் அமைக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இடைத்தரகர்கள் காதர் பேட்டை பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் பேனர் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story