மாநிலங்களுக்கு இடையே கராத்தே போட்டி

மாநிலங்களுக்கு இடையே கராத்தே போட்டி
மாநில கராத்தே போட்டி
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 23வது கராத்தே போட்டிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநிலங்களுக்கு இடையான 23வது கராத்தே போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்திய சோட்டா கான் டூ சம்மேளனம் சார்பில் குமரி மாவட்ட கராத்தே டூ அசோசியேஷன் மாவட்ட செயலாளர் கராத்தே ஸ்டீபன் ஒருங்கிணைப்பில் இந்த போட்டிகள் நடைபெற்றது.மாநில செயலாளர் ரதீஸ் தொடங்கி வைத்தார். இந்திய மேளன தலைவர் டாக்டர் சிவகுமார் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். குமரி மாவட்ட கராத்தே கழக மாவட்ட பொருளாளர் வக்கீல் செந்தூர் பாண்டியன், ஸ்கிப் இந்தியா துணை சேர்மன் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 160 வீரர்கள் பங்கேற்றனர். தலைமை நடுவராக சிவராமன் கிருஷ்ணா செயல்பட்டார். இதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டி புதுடெல்லியில் உள்ள டல் கோட்ரா ஸ்டேடியத்தில் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

Tags

Next Story