விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் - கலெக்டர் தகவல்

விவசாயிகளுக்கு  வட்டி இல்லா பயிர் கடன் - கலெக்டர் தகவல்

 சிறப்பு கடன் வழங்கும் விழா

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கடன் வழங்கும் விழா தென்காசி அருகே உள்ள நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்றார். சுய உதவி குழு கடன், விவசாய பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், அடமான கடன் மற்றும் சிறு வணிக கடன் உள்பட ரூ.2.23 கோடி கடனுக்கான காசோலைகளை 52 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். விழாவில் கூட்டுறவு துறை சங்கரன்கோவில் சரக துணை பதிவாளர் திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவி வேணி வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைப் பதிவாளர் கார்த்திக் கவுதம் நன்றி கூறினார்.

Tags

Next Story