கூட்டுறவு சங்கங்களில் வட்டியில்லா கடன் - விவசாயிகளுக்கு அழைப்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன். வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன். விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று. பாஸ்போர்ட் அளவு புகைப்ப டம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110/- பங்கு தொகை மற்றும் நுழை வுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம். இதில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் நாகப்பட்டினம் மண்டல இணைப்பதிவாளரை 7338721201-என்ற எண்ணிற்கும். நாகப்பட்டினம் சரக துணைப்பதிவாளரை 9443404299-என்ற எண்ணிற்கும். தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது