மாற்று பயிர் சாகுபடியில் கரும்பு விவசாயிகள் ஆர்வம்

மாற்று பயிர் சாகுபடியில் கரும்பு விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர் வட்டாரங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.


உத்திரமேரூர் வட்டாரங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில், காவூர், காவிதண்டலம், சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, கரும்பாக்கம், பினாயூர், அரும்புலியூர், திருவானைக்கோவில், மருதம், சிலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் பயிரிடப்படும் கரும்புகளை, மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்புகின்றனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் சர்க்கரைக்கு அரவை செய்கின்ற மொத்த கரும்புகளில், 40 சதவீதம் உத்திரமேரூர் வட்டார விவசாயிகள் சாகுபடி செய்கின்ற கரும்புகளாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டு வந்த இப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், தற்போது நெல் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கரும்பு கொள்முதல் விலை குறைவாக இருப்பதே காரணம் என, விவசாயிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயிகள் கூறியதாவது: கரும்பு விலை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கரும்புக்கான விலை குறைவாக இருப்பதும், கரும்புகளை வெட்ட ஆட்கள் பற்றாக்குறை பிரச்னையும் தொடர்ந்து உள்ளது.

Tags

Next Story