சட்டப்பணியாளராக சேவை செய்ய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பணியாளராக சேவை செய்ய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பணியாளராக சேவை செய்ய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.


சட்டப்பணியாளராக சேவை செய்ய விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வ சட்டப்பணியாளராக பணி புரிய விருப்பமுள்ள உள்ளூரில் வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குருமூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், இளையான்குடி, திருப்புவனம், சிங்கம்புணரி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா் சட்டப்பணியாளா்கள் பணிக்கு விருப்பமானவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணி நிரந்தரமானது அல்ல, முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் ஏதும் இல்லை.

சேவைக்கு தகுந்த கௌரவ ஊதியம் மட்டும் அளிக்கப்படும். மேலும் தன்னாா்வ சட்டப்பணியாளராக விண்ணப்பிக்க ஆசிரியா்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், சமூக நலம் தொடா்பாக கல்வி பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், மருத்துவா்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகளின் உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்கள், நன்னடத்தையுள்ள தண்டனை பெற்ற சிறைவாசிகள், ஓட்டுநா் உரிமம் வைத்திருப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே சட்டப்பணிகள் தன்னாா்வலா் பட்டியலில் உள்ள நபா்கள், மாவட்ட, வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு விண்ணப்பிக்க தகுதியுடைய சேவை மனப்பான்மை உள்ளவா்கள் தகுதியானவா்கள் ஆவா். இதற்கான விண்ணப்பத்தை சிவகங்கை மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாக, தலைவா், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம், சிவகங்கை-630560 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story