சர்வதேச அளவிலான வளரி விளையாட்டு போட்டி: ராமநாதபுரம் மாவட்ட மாணவர் தேர்வு

சர்வதேச அளவிலான வளரி விளையாட்டு போட்டி: ராமநாதபுரம் மாவட்ட மாணவர் தேர்வு

சர்வதேச அளவிலான வளரி விளையாட்டு போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சர்வதேச அளவிலான வளரி விளையாட்டு போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் நான்காம் ஆண்டு தேசிய அளவிலான வளரி விளையாட்டு போட்டி ஓசூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த வளரி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணி சார்பாக தமிழ்நாடு மாநிலத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வளரி வீரர்கள், ஜெ.அந்தோணி ஜெபாஸ்டின் தலைமையில் கலந்துகொண்டு 7 விதமான போட்டிகளில் விளையாடி பல பரிசுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.

சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக தமிழகம் சார்பாக விளையாடிய ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மாணிக்கநகர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான குருசாமி என்பவரின் மகன் மாரிச்செல்வம் இரண்டாம் இடம் பெற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உலக வளரி சாம்பியன் பட்டத்தை நான்கு முறை பெற்ற பிரான்ல் நாட்டை சேர்ந்த வளரி வீரர் ஸ்டீபன் மார்க்ரேட் முதலிடம் பெற்றதுடன் மாணவர்களுக்கு வளரிக்கலையில் புதிய யுக்திகளை பயிற்றுவித்ததோடு ஊக்கமும் கொடுத்தார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து கலந்துகொண்ட வளரி வீரர் ஸ்டீபன் மார்க்ரேட் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று நான்குமுறை வெற்றி பெற்றுள்ளர் என்பதால் தமிழக மாணவர் மாரிச்செல்வம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூரில் நடைபெற்ற சர்வதேச வளரி போட்டியை வளரி வீரர்கள் ராஜா மற்றும் கார்த்திக் பாண்டியன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


Tags

Next Story