சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
வேலூர் கோட்டை முன்பு உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வைத் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி வேலூர் கோட்டை முன்பு உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது நேதாஜி ஸ்டேடியம் வரை சென்று நிறைவடைந்தது. மேலும் இந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story