திருவண்ணாமலையில் சர்வதேச ஜோதிட மாநாடு

ஜோதிட மாநாடு
aஜோதிட முறைகளிலேயே சிறந்த முறையாக உள்ள மீனா - 2 என்ற ஜோதிட முறை தற்போது பிரபலமாகி வருகிறது. தருமபுரி பாரூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜே.கே. ஆர் ஆஸ்ட்ரோ ரிசர்ச் பவுண்டேஷன், என். வி.ராகவாச்சாரி தோற்றுவித்த மீனா - 2 என்ற உலகமெங்கும் பரப்பி வருகிறது. ஜே.கே. ஆர் அஸ்ட்ரோ ரிசர்ச் பவுண்டேஷன் நடத்தும் ஜோதிட வகுப்புகளில் இதுவரை 628 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள யோகா சமஸ்கிருதம் பல்கலை கழகம் சார்பில் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜே.கே. ஆர் ஆஸ்ட்ரோ ரிசர்ச் பவுண்டேஷனின் 5ஆம் ஆண்டு விழாவும், சர்வதேச ஜோதிட கருத்தரங்கமும் திருவண்ணாமலை எஸ். கே.பி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மல்லிகா அன்பழகன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். எஸ்.கே.பி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான ஆர்.சக்தி கிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.
சிந்தலக்கரை ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள், யோகா சமஸ்கிருதம் பல்கலை கழக வேந்தர் பி.வெங்கடகிருஷ்ணசாஸ்திரி, நிர்வாக அதிகாரி பிரபாகர் கஷ்யப் ஆகியோர் முன்னிலை வகிக்க பல்கலைகழக துணைவேந்தர் ஆர். விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஸ்ரீபகவத்மிஷன் நிறுவனர் ஸ்ரீபகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மீனா -2 என்ற நாடி குறித்த கருத்தரங்கில் டாக்டர்கள் டி.பிரியமதி, டி.பழனி, டி.அருள்மொழி, என். சுந்தரராஜன், ஆர்.கார்த்திகா, எஸ்.சௌம்யா, எம்.ராஜசேகரன், பி.ஏ.முகுந்தன் முரளி, டி.சோபனா, பி.கோகிலா ஆகியோர் பேசினார்கள். இதைத் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பிரபல ஜோதிடர்கள் ஈரோடு பூபதி, பொன்னையா சுவாமிகள், திண்டுக்கல் சின்னராஜ், சுபம் மாரிமுத்து, பி.தங்கபாண்டியன், ஷெல்விதாமு, டி.கோபு, டாக்டர்கள் ஐயப்ப சர்மா, சுப்பிரமணி மற்றும் கருணாநிதி ஆகியோர் பேசினார்கள். ஜோதிட மாநாட்டில் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான ஜோதிடர்கள் பங்கேற்றனர். முடிவில் கே.விஜயகுமார் நன்றி கூறினார். தி.மலையில் நடைபெற்ற சர்வதேச ஜோதிட மாநாட்டில் எஸ்.கே.பி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான ஆர்.சக்தி கிருஷ்ணன் சிறப்புரையாற்றினர்.
